மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளமைக்கு அமெரிக்கா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி.டெப்பிலிட்ஸ் தனது டுவிட்டரில் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றம் உறுதிசெய்த துமிந்த சில்வாவின் தீர்ப்பை தற்போது மன்னிப்பதென்பது சட்டத்தின் ஆட்சியைக் குறைத்து மதிப்பீடுக்கு உட்படுத்துவதாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
“இலங்கை அரசாங்கம் செய்துள்ள ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமமான அணுகல் அடிப்படைக்கு இது விரோதமானது.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டமைக்கு அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
We welcome the early release of PTA prisoners, but the pardon of Duminda Silva, whose conviction the Supreme Court upheld in 2018, undermines rule of law. Accountability and equal access to justice are fundamental to the UN SDGs to which the GoSL has committed.
— Ambassador Julie Chung (@USAmbSL) June 24, 2021