முடக்கநிலை கட்டுப்பாடுகள் நீக்கத் தொடங்கியதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்றுகள், ஏப்ரல் மாத ஆரம்பத்தில் இருந்து மிக உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளது என தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலக (ஓஎன்எஸ்) புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த மற்றும் பிற புள்ளிவிபரங்கள், தடுப்பூசி திட்டம் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் குறிக்கிறது.
கடந்த ஜூன் 19ஆம் திகதி முதல் வாரத்தில் சுமார் 153,000 பேருக்கு கொவிட் இருப்பதாக ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய வாரத்தை விட கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகம். இது ஜனவரி உச்சத்தை விட இன்னும் பத்து மடங்கு குறைவாக உள்ளது.
எனினும், தொற்றுக்கள், மருத்துவமனையில் சேர்க்கை மற்றும் இறப்புகள் அதிகரித்து வருகின்ற போதிலும், தடுப்பூசிகளுக்கு முந்தைய இந்த எண்ணிக்கையிலான தொற்றுகளின் அடிப்படையில், இறப்புகள் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு உயரவில்லை என ஓ.என்.எஸ். தெரிவித்துள்ளது.
பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு அமைப்பின் தலைமை நிர்வாகி டாக்டர் ஜென்னி ஹாரிஸ், ‘தடுப்பூசிகள் தொற்றுகள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு இடையிலான தொடர்பை உடைக்கத் தொடங்கியுள்ளன’ என கூறினார்.