இலங்கையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 18 ஆயிரத்து 342 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த சோதனையின் மூலமாக 1,867 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜூன் மாதத்தில் ஒரு நாளில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக சனிக்கிழமை 14,110 பி.சி.ஆர் சோதனைகள் மட்டுமே நடத்தப்பட்டன.
மேலும் நாளாந்தம் நடத்தப்படும் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கை குறித்து பல தரப்பினரும் கவலை வெளியிட்டுள்ளனர்.