தமக்கு எதிரான போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் அடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
கட்சியின் தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அக்கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
கடந்த சில நாட்களில் அரசாங்கத்தின் தவறுகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தாக்குவது, மிரட்டுவது போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தரமின்றி வீதி அமைப்பதை எதிர்த்து இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜே.வி.பி.யின் முன்னாள் மாகாண உறுப்பினர் சுதத் பலகல்ல மற்றும் பலர் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.