கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் 5 மற்றும் 6 ஆம் அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும், இந்த இரு அணு உலைகளில் எதிர்வரும் 2027 மற்றும் 2028 ஆண்டுகளில் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் தலா 100 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு ஏற்கனவே 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 மற்றும் 4 ஆவது அணு உலைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.