புதிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) திரிபு காரணமாக, பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஹொங்கொங் அரசாங்கம் தடை விதித்துள்ளது.
பிரித்தானியாவில் தற்போது டெல்டா மறுபாடு மிக தீவிரமாக பரவி வருகின்றது. இதனால் அங்கு நாளொன்றுக்கான பாதிப்பு அதிகரித்து வருகின்றது.
இந்தநிலையில், பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஹொங்கொங் தடை விதித்துள்ளது. இந்த தடை எதிர்வரும் ஜுலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா வகையில் இருந்து உருமாற்றம் அடைந்த L452R வைரஸ் பாதிப்பு, பிரித்தானியாவில் இருந்து வந்த பயணிகள் மூலமாக ஹொங்கொங்கிலும் பரவியுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, நேபாளம், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் வர ஹொங்கொங் அரசாங்கம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.