பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பது மற்றும் அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்பது குறித்து இன்னும் ஒரு முடிவு எட்டப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.
அவர் நாடாளுமன்றதிற்கு நுழைவது தொடர்பான தீர்மானத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே மேற்கொள்வார் என்றும் அவர் கூறினார்.
அவற்று முடிவு எட்டப்படும் சந்தர்ப்பத்தில் பசில் ராஜபக்ஷ வின் நாடாளுமன்ற பிரவேசம் குறித்து அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு 36 பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.