இரண்டு குழந்தைகள் கொள்கை மூலமே வறுமையையும், கல்வியறிவின்மையையும் போக்க முடியும் என அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
2 குழந்தைகள்வரை பெற்றவர்களே அரசு வேலைவாய்ப்பு, நலத்திட்டங்களைப் பெற முடியும் என்பதை படிப்படியாக நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், அதற்கு சட்டம் இயற்ற உள்ளதாகவும் அசாம் மாநில முதலமைச்சர் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
முஸ்லிம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு முதலமைச்சர் மேற்படி விளக்கமளித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், இரு குழந்தைக் கொள்கைக்கு இஸ்லாமியர்களிடம் எந்த எதிர்ப்பும் இல்லை என்றும், இஸ்லாமிய அமைப்பினர் பலர் இதனை வரவேற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.