தேசத் துரோக வழக்கில் தனக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற ஆங் சான் சூச்சியின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார்.
இதன் காரணமாக மியன்மாரில், பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூச்சிக்கு, சட்ட ரீதியான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையிட அனுமதி வாங்கப்படும் அதேவேளை தீர்ப்பு வெளியாகும் வரை, ஆங் சான் சூச்சிக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மார் அரசாங்கத்தின் முன்னாள் ஆலோசகரான ஆங் சான் சூச்சி, பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளார்.
கொரோனா விதிகளை மீறியமை, சட்ட விரோதமாக ஒலிபரப்புக் கருவிகளை வைத்திருந்தமை இலஞ்சம் பெற்றமை உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளன.