கொரோனா தொடர்பான எதிர்கால அவசர நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா இந்தியாவிற்கு 307 கோடி ரூபாய் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு அமைப்பு, இந்தியாவிற்கு ஏற்கனவே 150 கோடி ரூபாய் பெறுமதியான கொரோனா நிவாரண உதவிகளை வழங்கியுள்ள நிலையில், மீண்டும் 307 கோடி ரூபாயை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த ஆண்டு கொரோனாவால் அமெரிக்கா பாதிக்கப்பட்டபோது இந்தியா, மருந்துகள், முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்கியது. தற்போது இந்தியா கொரோனாவை சமாளிக்க அமெரிக்க மக்கள் துணை நிற்கின்றனர்.
கொரோனா பரிசோதனை, தொற்று சார்ந்த மனநல ஆரோக்கியச் சேவைகள், குக்கிராமத்திற்கும் மருத்துவ வசதி உள்ளிட்டவற்றுக்காக இந்தியாவுக்கு கூடுதலாக 307 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
கொரோனா தொடர்பான எதிர்கால அவசர நடவடிக்கைகளுக்கு இது உதவிகரமாக இருக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.