ரயில் என்ஜின் ஓட்டுனர்கள் சங்கம் இன்று காலை ஆரம்பித்த வேலைநிறுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ரயில் என்ஜின் ஓட்டுனர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தில்!
ரயில் என்ஜின் ஓட்டுனர்கள் சங்கம் இன்று (புதன்கிழமை) காலை 8 மணி முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளன.
ரயில் டிக்கெட்டுகளை மின்னணு முறையில் வழங்குவது தொடர்பான வேலைதிட்டத்தை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும் உரிய பதில் கிடைக்காததால் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.