ஸ்கொட்லாந்தில் கிட்டத்தட்ட 2,000 கொவிட் தொற்றுகள், ‘யூரோ 2020’ கால்பந்து போட்டிகளைப் பார்க்கும் மக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
1,991 தொற்றுகளில் மூன்றில் இரண்டு பங்கு ஜூன் 18ஆம் திகதி, இங்கிலாந்து – ஸ்கொட்லாந்து போட்டியை காண லண்டனுக்குச் சென்றவர்கள் என ஸ்கொட்லாந்து பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இந்த போட்டியை வெம்ப்லி விளையாட்டரங்கினுள் இருந்து 397 இரசிகர்கள் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கிளாஸ்கோவில் உள்ள ஃபான்சோன் அல்லது ஹாம்ப்டனில் நடந்த இரு போட்டிகளை காண கலந்துகொண்டவர்களுடன் ஒப்பிடுகையில், இது குறைந்த எண்ணிக்கையிலான தொற்றாகும்.
கொவிட் கட்டுப்பாடுகள் காரணமாக வெம்ப்லியில் நடந்த போட்டிக்கு, ஸ்கொட்லாந்துக்கு 2,600 டிக்கெட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.
ஆனால், பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட் இல்லாவிட்டால் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று எச்சரித்த போதிலும் லண்டனுக்கு பயணம் செய்ததாக நம்பப்படுகிறது.