யாழ்.மாவட்டத்தின் சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்களில் ஒன்றான சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட பண்டத்தரிப்பு, பிரான்பற்று கிராமத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இதன்போது பாரம்பரிய முறையிலான எள்ளெண்ணை உற்பத்தி தொழில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அத்துடன், பயனாளிகளுக்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், சண்டிலிப்பாய் பிரதேச செயலக செயலாளர், கிராம சேவையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், பிரான்பற்று கிராமத்தின் பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.