நுவரெலியா- நோர்வூட், வெஞ்சர் லோவலோரன்ஸ் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் லோவலோரன்ஸ் பகுதியைச் சேர்ந்த திருக்கேதீஸ்வரன் (49 வயது) என்பவரே இன்று (சனிக்கிழமை) காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவர், இன்று அதிகாலை மூன்று மணியளவில் மாடு பிடிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சென்றவர் மீண்டும் வீடு திரும்பாதமையினால் அவரை உறவினர்கள் தேடியப்போது, வீட்டிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்திலுள்ள பலா மரமொன்றில் சடலமாக தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவ்விடத்திற்கு வந்த அவர்கள் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
மேலும் சடலமாக கண்டெடுக்கப்பட்டவரின் சட்டை பையில் இருந்து கடிதமொன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். அக்கடிதத்தில் எனது மரணத்தை நானாகவே தேடிக்கொண்டேன்.
எனது குடும்பத்தினரை யாரும் துன்புறுத்த வேண்டாம் .எனது சுய சிந்தனையிலேயே இந்த கடிதத்தை எழுதுகிறேன்” என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடன் சுமையே தற்கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.