நாட்டில் மீண்டும் ஸ்பாக்கள் திறக்கப்படுவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலைமையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் சுகாதார அதிகாரிகள் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
வணிக நிறுவங்களுக்கு கடுமையான வழிகாட்டுதல்களை அறிவித்திருந்த நிலையில் சில நிறுவனங்களை செயற்பட அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகளை தளர்த்தத் தீர்மானித்ததாக கூறினார்.
இருப்பினும் இந்த கட்டுப்பாடுகளை குறித்த நிறுவனங்கள் மீறும்பட்சத்தில் சுகாதார வழிகாட்டுதல்களைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இதேவேளை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என்றும் இதன்போது ஸ்பாக்களை மூடி வேறு நிறுவனங்களை திறக்க பரிந்துரைக்கப்பட்டால் அதிகாரிகள் அதற்கேற்ப முடிவை எடுப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இருப்பினும், புதிய வழிகாட்டுதல்களின்படி விடுதிகள் மற்றும் பார்கள், சூதாட்ட நிலையங்கள், இரவு நேர களியாட்ட விடுதிகள், பந்தைய நிலையங்கள் என்பன மூடப்படும்.