கொரோனா வைரஸுக்கு எதிராக அஸ்ட்ரா செனெகாவின் முதல் டோஸைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக ஃபைசர் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கமைவாக இலங்கைக்குக் கிடைத்துள்ள 26 ஆயிரம் ஃபைசர் தடுப்பூசிகள் கொழும்பு -1 இருந்து கொழும்பு -15 வரையுள்ள 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படவுள்ளது.
தடுப்பூசி வழங்கப்படும் திகதி, நேரம் மற்றும் இடம் தொடர்பான விபரங்கள் குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
வைத்திய மத்திய நிலையங்கள் மற்றும் நடமாடும் நிலையங்கள் மூலமாக இந்தத் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.