கொரோனா வைரஸின் கவலைக்குரிய மாறுபாடுகள் இந்தியாவின் 174 மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் பல்வேறு மாறுபாடுகளை உருவாக்கி வருகிறது. இவற்றை கவலைக்குரிய மாறுபாடுகளாக உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளது.
இந்த கவலைக்குரிய மாறுபாடுகள் இந்தியாவின் 174 மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
அந்தவகையில் ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா வைரஸ்களும், டெல்டாவில் இருந்து திரிபடைந்த டெல்டா பிளஸ் தொற்றும் பல மாநிலங்களில் உள்ளதாகவும் அமைச்சம் தெரிவித்துள்ளது.