வவுனியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு நேற்று(புதன்கிழமை) முதற்கட்டமாக இடம்பெற்றது.
வைத்திய உயர் அதிகாரிகள் சிலரின் முயற்சியால் வவுனியா மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்காக 1000 தடுப்பூசிகள் வன்னி பிராந்திய இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கேமந்த பண்டாரவின் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த தடுப்பூசிகள் நேற்று வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் வைத்து நான்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றப்பட்டிருந்தது.
இது தொடர்பில் தடுப்பூசி பெறுவதற்காக வருகை தந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
வயதான எமக்கு தடுப்பூசியை பெற மிகவும் சிறப்பான ஏற்பாடுகளை சுகாதார தரப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
எவருக்கும் முன்னுரிமை வழங்காமல் அனைத்து வயதானவர்களையும் ஒரே மாதிரியாக கவனித்து தடுப்பூசிகளை வழங்கியிருந்தமையை இட்டு மெய்சிலிர்க்கின்றோம்.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு (MOH-Vavuniya) வைத்தியர்களுக்கும் இராணுவத்தினருக்கும் பொதுமக்கள் சார்பாக நாம் நன்றியை தெரிவிக்கின்றோம்.“ என்றனர்.
இந்நிலையில் 1000 பேருக்கான தடுப்பூசிகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் சுமார் 25 பேர் அதிகமாக வருகை தந்தமையினால் அவர்களை திருப்பி அனுப்பாமல் வவுனியா வைத்தியசாலையில் இருந்து 25 பேருக்குமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு ஏற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.