நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட பசில் ராஜபக்ஷ நிதியமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
நிதி அமைச்சராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
அத்துடன் அவர், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.