கிளிநொச்சி ஏ 9 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில், குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கிளிநொச்சி- உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரலிங்கம் பிரசன்னா (வயது 30) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே படுகாயம் அடைந்துள்ளார்
கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனத்தை அதே திசையில் பயணித்த மற்றொரு டிப்பர் வாகனம் முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், எதிரே வந்த மோட்டார சைக்கிளை மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்தவர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.