எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் மேலும் சில அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தாயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) வவுனியா நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
குறித்த சந்திப்பு தொடர்பாக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும்போதே சுரேன் ராகவன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, அரசியல் கைதிகள் விவகாரத்தில் நாம் எடுத்த முயற்சியின் காரணமாகவே 16 கைதிகள் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்
இந்நிலையில் மேலும் சில அரசியல் கைதிகளை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் விடுதலை செய்வதற்கு தாயாராக இருக்கிறோம்.
அத்துடன் அவர்கள் செய்தது, அரசுக்கோ அல்லது நீதிக்கோ பிழையாக இருக்கலாம். ஆனாலும் போர் முடிந்து 11 வருடங்களிற்கு பின்னர் பொது மன்னிப்பு கொடுத்து அவர்கள் வாழ வழிவிடப்படவேண்டும் என்பதே எனது எண்ணம்.
இதேவேளை காணாமல் போனோர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் புதிய சீர்சிருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.