நாட்டில் இதுவரை 38 இலட்சத்து 96 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக நேற்றைய தினத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 510 பேருக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 34 ஆயிரத்து 555 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை 3 இலட்சத்து 85 ஆயிரத்து 647 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 795 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல மேலும் 14 ஆயிர8த்து 464 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.