1990ஆம் வருடம், கொக்காவில் பகுதியில் செய்தி ஒலிபரப்பு கோபுரம் மற்றும் இராணுவ முகாம் மீதான தாக்குதலில் உயிரிழந்த கெப்டன் சாலிய அலதெனிய பி.டபிள்யூ.வி, இராணுவ வீரர்கள், பொதுமக்கள் ஆகியோரின் 31 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
கொக்காவில் படை வீரர்கள் நினைவு தூபியில், குறித்த நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.
652 ஆவது படை தலைமையகத்தின் படைத் தளபதியின் வழிகாட்டுதலில், 6ஆவது இலங்கை சிங்க ரெஜிமென்ற் படையணியின் படையினரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது இராணுவ அணிவகுப்பு மரியாதை மற்றும் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் வன்னி இராணுவ படைத்தலைமையக கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி.பண்டார பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
மேலும் கிளிநொச்சி மாவட்ட இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.