இலங்கையில் கொரோனா பரவுவதைத் தடுக்க உதவும் வகையில் உலக சுகாதார அமைப்பின் கொவேக்ஸ் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு 1.45 மில்லியன் டோஸ் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.
இந்த தடுப்பூசிகள் ஜப்பானில் இருந்து எதிர்வரும் வாரங்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாகவும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முடிந்தவரை பலருக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தடுப்பூசி திட்டத்தை மேலும் துரிதப்படுத்தவும் இலங்கையில் கொரோனா பரவாமல் தடுக்கவும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இந்த ஆதரவுகள் மூலம் பங்களிக்க முடியுமென நம்புவதாக ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்கு உதவுவதற்காக ஜப்பான் இலங்கைக்கு 16.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
அதேநேரம், கொரோனாவுக்கு எதிரான இந்த கூட்டுப் போரில் ஜப்பான் இலங்கையுடன் ஒற்றுமையுடன் தொடர்ந்து நிற்கும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.