நாட்டில் போராட்டங்களை அடுத்து இடம்பெறும் அமைதியின்மையின் போது ஒருவர் கொல்லப்பட்டார் என்பதை கியூபா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தலைநகர் ஹவானாவின் புறநகரில் திங்கட்கிழமை டியூபிஸ் லாரன்சியோ தேஜெடா என்ற 36 வயதுடைய ஒருவர் இறந்துவிட்டதாக மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் நாடு தழுவிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்போது அரச நிறுவனம் மீது தாக்குதலை மேற்கொண்ட குழுவின் உறுப்பினர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பொருளாதார வீழ்ச்சி, உணவு, மருந்து பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு, கொரோனா தொற்றை அரசாங்கம் கையாளும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை முதல் ஆர்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.
பொருளாதார தடைகள் குறித்த கியூபாவின் பிரச்சினை காரணமாக நிதியுதவி வழங்கப்பட்டு அமெரிக்காவால் ஆர்ப்பாட்டங்கள் தூண்டப்பட்டதாக அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது.