இலங்கையில் நேற்று மாத்திரம் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 445 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய நேற்று 2 இலட்சத்து 89 ஆயிரத்து 122 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாம் டோஸும் 32 ஆயிரத்து 285 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டன.
இதனையடுத்து, நாட்டில் இதுவரையில் 34 இலட்சத்து 17 ஆயிரத்து 525 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாம் டோஸும் 11 இலட்சத்து 36 ஆயிரத்து 881 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டன.
அதேநேரம், நேற்று 15 ஆயிரத்து 202 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸும் 700 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது.
மேலும் 36 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது.