நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழிக்கவல்ல பி-8ஐ போர் விமானம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2ஆவது போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல், பேரிடர் மீட்புப் பணிகளிலும் பி-8ஐ போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
போர் விமானங்களை இயக்குவதில் இந்திய கடற்படையினருக்கு போயிங் நிறுவனமே பயிற்சி அளித்து வருகிறது.
அந்தப் போர் விமானங்களுக்குத் தேவையான உபகரணங்கள், பராமரிப்பு சேவைகள் உள்ளிட்டவற்றையும் அந்நிறுவனமே வழங்கி வருகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளது.