போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளை பொலிஸார் கைது செய்து, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று (புதன்கிழமை) பாரிய வாகனப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு தாமரைத் தடாக முற்றலில் ஆரம்பமான இந்தப் பேரணி, தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.