கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்காக முதல் கட்டமாக 800 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்காக 1500 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
இந்த தொகை கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஏற்பட்ட பாதிப்புகளை புனரமைப்பதற்கும், மூன்றாது அலையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கும் பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
இந்நிலையில், இதற்கு முதல் கட்டமாக 800 கோடி ரூபாயை விடுவிக்க மத்திய அமைச்சர் ஒப்புக்கொண்டதாகவும், திட்ட மதிப்பீடுகளை ஆராய்ந்த பின் மேலும் தேவையான நிதிகளை வழங்குவதாகவும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.