உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் மீதான சுங்க வரிகளை தற்காலிகமாக இரத்து செய்து கியூபா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் நாட்டிற்கு வரும் பயணிகள் இறக்குமதி வரிகளை செலுத்தாமல் உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை கொண்டு வர அனுமதிக்கும்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பயணிகள் கொண்டு வரும் இத்தகைய பொருட்களுக்கு வரம்பு இருக்காது.
எவ்வாறாயினும், இந்த நடவடிக்கை தற்காலிகமானது மற்றும் அரசாங்கத்தின் விமர்சகர்களால் மிகக் குறைவு, மிகவும் தாமதமானது என்று கேலி செய்யப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக கம்யூனிஸ்ட் நடத்தும் தீவில், மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
உணவு மற்றும் மருந்து பற்றாக்குறை, விலை உயர்வு மற்றும் கொவிட்-19 தொற்றை அரசாங்கம் கையாளுவதை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் ஞாயிற்றுக்கிழமை வீதிகளில் இறங்கினர்.
அங்கீகாரமற்ற போராட்டங்கள், அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் அங்கு சட்டவிரோதம் ஆகும். எனவே இந்த போராட்டங்களால் பலர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் உயிரிழந்தார்.