வடமேற்கு நைஜீரியாவில் ஆயுதம் ஏந்தியவர்கள் 60 பேரை கடத்திச் சென்றுள்ளதாகவும் ஒருவரைக் கொலை செய்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜம்பாரா மாநிலத்தில் ஒரே இரவில் நுழைந்த குறித்த கடைதற்ககார்கள் கிராமத் தலைவரை சுட்டுக் கொன்றதுடன் மற்றவர்களை கடத்திச்சென்றுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அங்குள்ள ஐந்து கிராமங்களுக்கு 70 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் சென்ற அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் ஆயுதக் கொள்ளைகள் மற்றும் கடத்தல்காரர்கள் தொடர்ந்தும் பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கியமாக வடமேற்குப் பகுதிகளில் கடத்தல் சம்பவங்களைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் பெரும்பாலும் தவறிவிடுகிறார்கள் என்றும் கூறப்படுகின்றது.