மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தாலும் அதை எதிர்கொள்ள 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு 5 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அதேநேரம் எதிர்வரும் நாட்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகம் முழுவீச்சில் தயாராக இருக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.