இலங்கைக்கு இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 12 இலட்சத்து 64 ஆயிரம் கோவ்ஷீல்ட் தடுப்பூசிகளும் 7,100,000 சினோபோர்ம் தடுப்பூசிகளும் கிடைத்துள்ளன.
இதேவேளை 180,000 டோஸ் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகளும் 128,700 டோஸ் பைசர் மற்றும் 1,500,000 மடர்னா தடுப்பூசிககளும் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இவற்றில், 3,364,100 டோஸ் தடுப்பூசிகள் நாட்டிற்கு நன்கொடையாகப் பெறப்பட்டது என்றும் 6,808,700 டோஸ் தடுப்பூசியை அரசாங்கம் கொள்வனவு செய்தது என்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
அதேநேரம் ஜப்பான் அரசாங்கத்தின் சார்பாக அடுத்த இரண்டு வாரங்களில் இலங்கைக்கு 5,600,000 டோஸ் சினோபோர்ம் மற்றும் 1,470,000 டோஸ் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை கிடைக்கும் என்று அவர் கூறினார்.