கொரோனாவுக்கு மத்தியில் இலங்கையில் டீனியா (TINEA) என அழைக்கப்படும் தோல் நோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
வட மத்திய மாகாணம் உட்பட பல பகுதிகளில் இந்த தோல் நோய் பதிவாகியுள்ளதாக அனுராதபுர போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஹேமா வீரகோன் தெரிவித்துள்ளார்.
ஒரு பூஞ்சையால் ஏற்படும் TINEA என அடையாளம் காணப்பட்ட இந்த நோய் வேகமாகப் பரவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் பாதிப்புகள், மருந்துகளுக்கு ஒவ்வாமை, சுய மருந்துகள் மற்றும் சமூக நடவடிக்கைகள் ஆகியவை தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லா வயதினரும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நோயிலிருந்து மீள சுமார் ஆறு மாதங்களுக்கு மருத்துவ ஆலோசனையின் கீழ் சிகிச்சைப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு இல்லையெனில் தொற்று மோசமடையக்கூடும் என்பதோடு, பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.