வடமேற்கு நைஜீரியாவில் கொள்ளைக்காரர்களால் அண்மையில் கடத்தப்பட்ட தாய்மார்கள் சிறுவர்கள் என 100 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 8 அன்று ஜம்பாரா மாநிலத்தில் கடத்தப்பட்டவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள் இந்த சம்பவத்தின் போது நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்றும் கூறினர்.
எந்தவிதமான மீட்பு தொகையும் செலுத்தப்படாமல் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக ஜம்பாரா மாநில அரசு அறிவித்துள்ளது.
நைஜீரியாவில் கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து, 1,000 க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டுள்ளதுடன் சிலர் கொல்லப்பட்ட நிலையில் பெரும்பாலானவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஜம்பாரா மற்றும் அண்டை மாநிலங்களான கடுனா மற்றும் கட்சினாவில் உள்ள குற்றவாளிகளை வெளியேற்றுமாறு ஜனாதிபதி முஹம்மடு புஹாரி இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனை அடுத்து இந்த வார தொடக்கத்தில், வன்முறை கும்பலுக்கு எதிரான தாக்குதலின் போது, நைஜீரிய விமானப்படை விமானம் ஜம்பாரா மற்றும் கடுனா மாநிலங்களின் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டது.