பிரித்தானியாவில் உள்ள ஒவ்வொரு ஆறு உள்ளூர் அதிகார சபைகளில் ஒன்றில் பசியின் வீதம், தேசிய சராசரியை விட 150 சதவீதம் அதிகம் என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஷெஃபீல்ட் பல்கலைக்கழகம் மற்றும் உணவு அறக்கட்டளை மேற்கொண்ட இந்த ஆய்வில், உணவுப் பாதுகாப்பின்மையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாக விக்கோம்பே அடையாளங் காணப்பட்டுள்ளது.
பக்கிங்ஹாம்ஷையரில் 14 சதவீத மக்கள் பசியுடன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 சதவீத மக்கள் உணவை அணுக முடியாமல் தவிக்கின்றனர்.
யார்க்ஷயரில் 13 சதவீத மக்கள் பசியுடன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஐந்து பெரியவர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உணவை அணுக சிரமப்படுகிறார்கள். குறைந்த பசி, நெருக்கடி அல்லது கவலை கொண்ட பகுதியாக செயின்ட் ஆல்பன்ஸ் உள்ளது.
ஜனவரி 2021ஆம் ஆண்டில், 4.2 சதவீத பெரியவர்கள் முந்தைய மாதத்தில் பசியுடன் இருந்ததாகவும், ஆனால் ஒரு முறையாவது சாப்பிடமால் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தின் கிழக்கில், பெரும்பான்மையான அதிகாரிகள் 20 சதவீதம் மிகக் குறைந்த பசியைக் கொண்டுள்ளனர்.