இந்தியாவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாகவும், இதர வைரஸ்கள் குறைந்து விட்டதாகவும் இன்சாகாக் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்த ஆய்வறிக்கையில், உலகளவில் டெல்டா வைரஸ் வேகமகா பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா இரண்டாது அலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க டெல்டா வைரஸ்தான் காரணம்.
தற்போதும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புதிய பாதிப்புகளுக்கு மூல காரணமாக டெல்டா வைரஸ் உள்ளது. சிறப்பான சுகாதார நடவடிக்கைகளுடன் அதிகளவில் தடுப்பூசி செலுத்திய சிங்கப்பூர் போன்ற நாடுகளில் டெல்டா பாதிப்பு அதிகம் இல்லை.
இந்தியாவில் டெல்டா ஆதிக்கம் உள்ள போதிலும் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவது 908 சதவீதம் என்ற அளவில் தான் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.