அமெரிக்காவின் மொடர்னா கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசியை 12 முதல் 17 வயதுக்குட்பட்டோருக்கு செலுத்த, ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மொடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியை 3,700க்கும் மேற்பட்ட சிறாருக்கு (12-17 வயது பிரிவினர்) செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.
இதில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்படும் நோயெத்திர்ப்புகளுடன் ஒப்பிடும் அளவுக்கு சிறாரிடமும் இந்த தடுப்பூசி நோயெத்திர்ப்புகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மொடர்னா தடுப்பூசியை 12 முதல் 17 வயது வரையிலான சிறாருக்கு செலுத்தலாம் என அமெரிக்க மருந்துகள் நிறுவனம் பரிந்துரைத்திருந்தது. இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே போடப்படுகின்ற போதும், ஃபைஸர் தடுப்பூசி மட்டும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கும் போடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.