இலங்கையில் மேலும் சில பகுதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, களுத்துறை, அம்பாறை மற்றும் கொழும்பு மாவட்டங்களைச் சேர்ந்த சில இடங்களே தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெக்குலந்தல தெற்கு கிராம சேவகர் பிரிவின் பிம்புர பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொத்துவில் 13 கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்போவில தெற்கு கிராம சேவகர் பிரிவின் கரதியான தோட்டமும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.