நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் இதற்கு முன்னர் பணிக்கமர்த்தப்பட்ட சிறுமிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.
ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் மரணித்த ஹிஷாலினியை ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு அழைத்துச் சென்ற தரகரால் முன்னதாக பல சந்தர்ப்பங்களில் 11 சிறுமிகள் பணிக்கு அமர்த்தப்பட்டமை குறித்து நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹிஷாலினியின் மரணம் குறித்து ஆராயும் பொலிஸ் குழு இன்று (செவ்வாய்க்கிழமை) டயகம பகுதியில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.
இதற்காக அந்த பொலிஸ் குழு நேற்று மாலை கொழும்பில் இருந்து டயகம பகுதிக்கு சென்றுள்ளது.
மேலும் இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்த ஏனைய சிறுமிகளிடம் குறித்த குழு வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளது.