அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைத்த நிதி திருத்த சட்டவரைபில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபர் இதனை அறிவித்துள்ளார்.
குறித்த மனு பிரியந்த ஜயவர்தன, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான அரச தரப்பு சிரேஷ்ட சட்டவாதி நிர்மலன் விக்னேஸ்வரன் நீதிமன்றுக்கு இதனை தெரியப்படுத்தினார்.
குறித்த சட்டமூலத்தின் 7 சரத்துக்களில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்திடம் அறிவித்தார்.