ஐ.சி.சி.யின் இருபதுக்கு 20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் வீரர் வனிந்து ஹசரங்க இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
T20 சர்வதேச தொடருக்கான பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரப்படுத்தலை இன்று (புதன்கிழமை) சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
அதன்படி 720 புள்ளிகளுடன் இலங்கை அணியின் வீரர் வனிந்து ஹசரங்க இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முதலிடத்தில் தென்னாபிரிக்க அணியின் வீரர் தப்ரெஸ் ஷம்ஸி 792 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.
முன்னர் இரண்டாவது இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் அணியின் வீரர் ரஷீத் கான் 3 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.