இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் இன்று (புதன்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்த சந்திப்பின்போது இரு தரப்பு வர்த்தகம், கோவிட் தடுப்பூசிகள், குவாட் நாடுகள் கூட்டமைப்பு, ஆப்கான் பாதுகாப்பு நிலவரம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரையும் பிளிங்கென் சந்தித்து பேசவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.