ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “ஐங்கரன்” திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகவுள்ளது. விரைவில் இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமன்மேன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட இந்த திரைப்படம் பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.


















