புதிய கல்விச் சீர்திருத்தங்களை இந்த ஆண்டு முதல், தரம் 6 மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் தேசிய நிகழ்வு அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் இன்று காலை கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரினி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்றிருந்தது இதன்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார் .
















