அமெரிக்காவைப் போலவே இந்தியாவும் சுதந்திரமான எண்ணம் கொண்ட குடிமக்களைக் கொண்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் இடம்பெற்ற சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இரு நாடுகளும் கொள்கையளவில் இணைந்து செயற்படுவதாகவும் கூறினார்.
இன்று ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் சவால்களை நட்பு முறையில் இந்தியாவுடன் விவாதித்து ஜனநாயக உறவுகளை பலப்படுத்த இருதரப்பினரும் உறுதி எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதேநேரம் இந்த சந்திப்பின்போது சீனா, ஆப்கான், இந்தோ பசுபிக் வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.