அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட நிதி திருத்த சட்டவரைபிற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற வியாக்கியானம் சபாநாயகருக்கு விரைவில் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட பல தரப்பினர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று இடம்பெற்றபோது, அரசாங்கத்தின் நிதி திருத்த சட்டவரைபில் சில திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் உயர் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இடம்பெற்ற விசாரணையின்போது நிதி திருத்த சட்டவரைபில் மேற்கொள்ளப்படவிருந்த ஏழு திருத்தங்களை உயர் நீதிமன்றில் திருத்தங்கள் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.