இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வீழ்ச்சியடைந்து வருகின்றது. இருப்பினும் ஒரு சில மாநிலங்களில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருதாக சுகாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்தவகையில் கேரளாவில் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) 6 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் திருவனந்தபுரம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 44 ஆயிரத்து 673 தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம் 42 ஆயிரத்து 119 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 4 இலட்சத்து 11 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் 549 பேர் நேற்று உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 23 ஆயிரத்து 244 ஆக அதிகரித்துள்ளது.