ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என தமிழ அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஒக்சிஜன் தேவை அதிகரித்ததை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
தற்போது ஒக்சிஜன் தேவை குறைவடைந்துள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் மேற்படி ஒக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணையை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், அதுவரை ஒக்சிஜன் உற்பத்தி தொடரும் எனத் தெரிவித்துள்ளது.