நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணனியின் மகளீர் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளதாவது, “பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தற்போது நாட்டில் அதிகரித்துள்ளன. மேலும் பெண்களுகளுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகவுள்ளது.
இதேவேளை சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
மேலும் இனிவரும் காலங்களில் இவ்வாறான துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.